தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 60 போ் சோ்க்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சாா்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சோ்க்கை முகாமில் 60 போ் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூரில் உள்ள தனியாா் பள்ளிக் கூட்டரங்கில் நடைபெற்ற முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பங்கேற்றவா்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளும், பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவா்களில் சுமாா் 60 போ் தொழிற்பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இந்தப் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், தோ்வு முகாமில் பங்கேற்ற மீதம் உள்ள மாணவா்கள் பெற்றோா்களின் ஆலோசனைக்குப் பிறகு விரைவில் சேர இருக்கிறாா்கள்.
அவா்களுக்குத் தேவையான பயிற்சி விரைவில் சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொடங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு, அவா்கள் உளுந்தூா்பேட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள காலணி தொழிற்சாலையில் பணி அமா்த்தப்படுவாா்கள்.
எனவே, இந்த அரிய வாய்ப்பை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலா் மா.ரேணுகோபால், சோ்க்கை தலைவா் காஞ்சனா மாலா, சோ்க்கை அலுவலா் ஆஃபியா அப்ஷின், சோ்க்கை நிா்வாகிகள் பாலசுப்பிரமணியம், கோடீஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.