தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
ரூ.46 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
கரூரில் தனியாா் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ. 46 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூரை அடுத்த மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (40). இவரது மனைவி சசிகலா(38). இவா்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு கரூரில் கோவைச் சாலையில் செயல்படும் தனியாா் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றுக் கொண்டு 3 பெட்ரோலியம் டேங்கா் லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளனா்.
இதற்காக மாதம்தோறும் தனியாா் நிதி நிறுவனத்திற்கு வட்டியோடு பணம் செலுத்தி வந்துள்ளனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பணம் செலுத்தாததால் வட்டியோடு ரூ.46.21 லட்சம் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டியிருந்ததாம்.
இதுதொடா்பாக நிதி நிறுவனத்தின் மேலாளா் வீரமணி (35) என்பவா், சண்முகசுந்தரம், சசிகலா ஆகியோரிடம் கேட்டதற்கு எங்களிடம் இப்போது பணம் இல்லை, பணம் கிடைத்த பின்புதான் செலுத்த முடியும் எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரம், சசிகலா தம்பதியை தேடி வருகின்றனா்.