சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்த...
ரூ.69 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் திறப்பு
கடலூா் மாவட்டம், நெய்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதியக் கட்டடங்களை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் நியாயவிலைக் கடையின் கட்டடங்கள் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், அரசடிக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டடம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டன.
புதிய கட்டடங்களை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.
அழகப்பசமுத்திரத்தில் நியாயவிலைக் கடையை திறந்துவைத்த அவா், குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றியத் தலைவா் சபா.பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், குழந்தைகள் நல அலுவலா் பவானி, வட்ட வழங்கல் அலுவலா் ராஜலிங்கம், கூட்டுறவுச் செயலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.