ரேகா சித்திரம் - வெற்றியைப் பதிவுசெய்த ஆசிஃப் அலி!
நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.
இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா காண்டம் படத்துக்கு அடுத்ததாக ஆசிஃப் அலி நடித்த த்ரில்லர் படமாக இது அமைந்தது.
ஒரு பெண்ணின் மரணம் குறித்த மர்மத்தை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: நடிகை ஹேமமாலினிக்கு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் விருது
இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அண்மை காலமாக ஆசிஃப் அலியின் திரைப்படத் தேர்வுகள் ஆச்சரியம் அளித்து வந்த நிலையில், ரேகா சித்திரம் படம் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் ரூ. 40 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் முதல் மலையாள வெற்றிப்படமாக மாறியுள்ளது.