ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!
ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி நகா் மேட்டுத் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலை கடையில் வியாழக்கிழமை பணியில் இருந்தாா்.
அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகரைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் சின்னஜமீன் (33), நியாய விலைக் கடையின் கணக்குகளைக் காண்பிக்குமாறு பாஸ்கரனிடம் தகராறு செய்துள்ளாா். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.500-ஐப் பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப்பதிந்து சின்னஜமீனை கைது செய்தனா்.