செய்திகள் :

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் - வாசகர்கள் நன்கொடை அளிக்கலாம்

post image

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. 'ரோஜா ஆர்ட்ஸ்' என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள,  'ரோஜா முத்தையா' ஆனார். எல்லோரும் பணம், காசு தேடிப் பரிதவித்துக்கொண்டிருந்த காலத்தில்,  முத்தையா, வீண் என்று தூக்கிப்போட்ட நூல்களையும் ஆவணங்களையும் தேடித்தேடி சேகரித்தார். 1992-ல் அவர் காலமானபோது, 50,000 நூல்களும் துண்டுப் பிரசுரங்கள், அறிக்கைகள், திரைப்பட, நாடக போஸ்டர்கள் போன்ற 50,000 ஆவணங்களும் அவரின் சேகரிப்பில் இருந்தன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

பிறகு, தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. அருணாசலம், முன்னாள் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ஐராவதம் மகாதேவன், கவிஞரும் மொழியியல் அறிஞருமான ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல ஆளுமைகளின் நூல் சேகரிப்புகளும் இந்த நூலகத்துக்கு வர இதன் தளம் அடர்த்தியானது. தற்போது, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழைய பதிப்பு நூல்கள், சமூக ஆவணங்கள், இதழ்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

அரிய நூல்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் வழி டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் இங்கே நடக்கின்றன. தமிழின் எல்லாச் செவ்வியல் இலக்கியங்களின் எல்லாப் பதிப்புகளும் நுண்படச் சுருளில் பதிவு செய்யப்பட்டு, நூலகத்தின் ஒரு பகுதியில் 18 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையிலும் 35% ஈரப்பதத்திலும்  பாதுகாக்கப்படுகின்றன.

ஏராளமான சொற்பொழிவுத் திட்டங்கள், ஆய்வுத் திட்டங்கள், பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன. சிந்துவெளி ஆராய்ச்சி மையம், பொதுவியல் ஆய்வு மையம் ஆகிய மையங்களும் இங்கே செயல்படுகின்றன..

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தற்போது மேலும் ஒரு அரிய பணியைக் கையில் எடுத்திருக்கிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, தமிழ் அறிவு வளாகம் ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் பிரமாண்டமான நூலகம், தமிழ் அச்சுப்பயன்பாட்டின் வரலாற்றை விவரிக்கும் வகையிலும் சிந்துவெளி ஆராய்ச்சிகளை புரிந்துகொள்ளும் வகையிலும் இரண்டு அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணக் காப்பகம் ஆகியவை உருவாக்கப்படவுள்ளன. இந்த அறிவு வளாகம் ஒரு பண்பாட்டு சுற்றுலா மையமாகவும் செயல்படவுள்ளது.  இதற்கென தமிழக அரசு 32 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கியுள்ளது விரைவில் கட்டுமானப் பணி தொடங்கவுள்ளது.


நம் வரலாறு மற்றும் பண்பாட்டு அடையாளமாக உருவாகப்போகும்  தமிழ் அறிவு வளாகத்துக்கு  விகடன்  வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி இந்த அரும் பணியில் பங்கேற்கலாம்.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,

Roja Muthiah Research Library Trust-Building Fund,

Current A/C No. 42625211182, State Bank of India,

Tidel Park Branch, Branch Code: 04285,

IFS Code: SBIN0004285 என்ற வங்கிக்கணக்கில் தங்கள் கொடையைச் செலுத்தலாம்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் 501c(3) பதிவுடைய நிறுவனங்கள் மூலமும்  பிற நாடுகளில் இருப்பவர்கள் 501c(3) பதிவுக்கு நிகரான நிறுவனங்கள் மூலமும் பணம் செலுத்தலாம்.

வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்:

Roja Muthiah Research Library Trust,

FCRA account - 40267751909,

State Bank of India, New Delhi Main Branch,

IFS Code - SBIN0000691,

SWIFT Code - SBININBB104


கூடுதல்  விவரங்களுக்கு: 98944 53334

Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``மக்களுக்காக மேடையேறும் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்'' - நெகிழ வைத்த திணை நிலவாசிகள்

கலைஞர்களுக்கான உரிய மரியாதையை செலுத்துவது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இதன் பிறகும் கலையை நமக்கு மரியாதை செய்வோர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும். இப்படியான ஒரு விஷயத்தை நிகழ... மேலும் பார்க்க

முத்து காமிக்ஸ்: "சினிமாவில் விருது வாங்கும்போது கூட கிடைக்காத சந்தோஷம் அது" - நெகிழும் பொன்வண்ணன்

கதை சொல்லலில் எத்தனையோ நவீன கலை வடிவங்கள் வந்தாலும் சுவாரஸ்யமும் கற்பனையும் சித்திரமும் செழித்துக்கிடக்கும் ஒரு கலைவடிவம் காமிக்ஸ்.தமிழில் காமிக்ஸ்களை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவரான முத்து காமிக... மேலும் பார்க்க

என் கேள்விக்கென்ன பதில்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எட்யுரைட் அறக்கட்டளை, AI சிங்கப்பூர் இணைந்து, தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் உருவாக்க உடன்படிக்கை!

எட்யுரைட் அறக்கட்டளையானது (EduRight Foundation) AI சிங்கப்பூர் (AISG)உடன் இணைந்து தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் (LLM - Large language model) உருவாக்குவதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம... மேலும் பார்க்க