ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
எட்யுரைட் அறக்கட்டளை, AI சிங்கப்பூர் இணைந்து, தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் உருவாக்க உடன்படிக்கை!
எட்யுரைட் அறக்கட்டளையானது (EduRight Foundation) AI சிங்கப்பூர் (AISG)உடன் இணைந்து தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் (LLM - Large language model) உருவாக்குவதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலமாக AISG-இன் தென்கிழக்கு ஆசிய மொழிகளின் பெரு மொழிப் போன்மத்தில் (LLM - ) தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த திறன்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எட்யுரைட் அறக்கட்டளையின் தலைவர் திரு. கீர்த்தி ஜெயராஜ் மற்றும் AISG பிரதிநிதிகளுக்கு இடையே 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த நேரடிச் சந்திப்பிற்குப் பிறகு, கடந்த 5 மார்ச் 2025 அன்று இந்த முக்கியத்துவம் பெற்ற உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
உடன்படிக்கையின் முக்கிய நோக்கங்கள்
இந்த உடன்படிக்கை பின்வரும் கருப்பொருட்களை உள்ளடக்கியுள்ளது:
திறந்தநிலை மூலங்களைச் (Open source) சேகரித்தல் – அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெற்று ஒருங்கிணைத்தல்.

SEA-LION மாதிரியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டு பயிற்சி அளித்தல் – இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுத் திறந்தநிலை மூல உரிமையின் கீழ் வெளியிடப்படும்.
தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் அதன் பயன்பாட்டிற்கும் AI தொழில்நுட்பத்தைச் சிறப்பாக அணுகுவதற்கும் இம்முயற்சி வித்திடுகிறது.
AI ஜனநாயகமயமாக்கலில் கவனம்பெறத்தக்க நிகழ்வு!
எட்யுரைட் அறக்கட்டளை தலைவர் திரு. கீர்த்தி ஜெயராஜ் நேரடிச் சந்திப்பின்போது, “தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான AI தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்குவதில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியப் படிநிலையாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
தமிழ் மொழியின் அமைப்பியல்புக்கு முக்கியத்துவம் தந்து இந்தப் பெரு மொழிப் போன்மம் மேம்படுத்தப்படும்.
ஆர்வலர்களுக்கு ஓர் அழைப்பு
இத்தகு முன்னோடியான இலக்கில் பங்கெடுக்க தமிழ் மாணவர்களும் ஆய்வாளர்களும் அழைக்கப்படுகின்றனர். தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பும் தன்னார்வலர்கள் EduRight Foundation இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது info@eduright.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.