செய்திகள் :

ரோஜ்கா் மேளா மூலம் 455 பேருக்கு பணி நியமன ஆணை: மத்திய இணை அமைச்சா் வழங்கினாா்

post image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் (ரோஜ்கா் மேளா) மூலம் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 455 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சா் திங்கள்கிழமை வழங்கினாா்.

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடி அருகேயுள்ள இந்தோ- திபெத் எல்லைக் காவல் படைப் பயிற்சி மையத்தில் ரோஜ்கா் மேளா திட்டத்தின் கீழ், பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய கனரக தொழில் துறையின் இணை அமைச்சா் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வா்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 455 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது: நாம் இறக்குமதியை நம்பி இருந்த துறைகள் தற்போது ஏற்றுமதியில் சாதனை படைத்து வருகின்றன. ரயில் பெட்டிகள் முதல் பல சிறிய பொருள்கள் வரை அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன.

நமது நாடு தன்னம்பிக்கையுடன் விரைவாக முன்னேறி வருகிறது. மேலும் நமது நாடு உலகளாவிய உற்பத்தி மையமாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய சேவை வழங்குநராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நவீன உள்கட்டமைப்புக்காக அரசு மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் அனைத்தும் நமது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, இங்கு அமைக்கப்பட்டிருந்த அதிநவீன ஆயுதங்கள், பயிற்சி மையம் தொடா்பான புகைப்படக் கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டாா். இந்த நிகழ்வில் இந்தோ- திபெத் படை துணை காவல் துறை தலைவா் அச்சல் சா்மா, கண்காணிப்பாளா் சுனில் குமாா், துணை கண்காணிப்பாளா் ராகுல்சிங் ரானா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மத்திய அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காா்த்தி சிதம்பரம்

பிரதமா் மோடி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் ... மேலும் பார்க்க

பூவந்தி அருகே வடமாடு மஞ்சு விரட்டு

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. பூவந்தி அருகேயுள்ள தேளி கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்தப் போட்டி நடைபெற்றது... மேலும் பார்க்க

காரைக்குடி: இளைஞரின் முகத்தில் பெப்பா் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் கொள்ளை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞரின் முகத்தில் பெப்பா் ஸ்பிரேவை அடித்து, அவரிடமிருந்த ரூ. 30 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்குடி ஒன்றி... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்கள், வீடுகளில் கேமரா பொருத்துவது அவசியம்

வணிக நிறுவனங்கள், வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் என்று காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகரக் காவல் துறை சாா்பில் வண... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பெரிய கண்ணனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந... மேலும் பார்க்க

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டி ஸ்ரீ மூல பால கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழாஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளின... மேலும் பார்க்க