கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை...
`ரோபோட் இல்ல; கோபோட்’ - அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
நாட்டில் ஐ.டி கம்பெனிகள் ஏற்கனவே பணியாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்துக்கொண்டு வருகின்றன. இதனால் ஐ.டி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐ.டி கம்பெனிகள் மட்டுமல்லாது வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இப்போது தங்களது துறையில் அதிக அளவில் ரோபோகளை பணியில் அமர்த்த முடிவு செய்து உள்ளது. அமேசான் நிறுவனத்தில் இப்போது 12 லட்சம் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்கின்றனர்.
2018ம் ஆண்டுக்கு பிறகுதான் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரித்தது. ஆனால் இப்போது அதுவே அந்நிறுவனத்திற்கு சுமையாக மாறி உள்ளது.

நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் பேக்கிங், டெலிவரி உட்பட அனைத்து பிரிவிலும் தானியங்கி முறையை கொண்டு வர அமேசான் முடிவு செய்துள்ளது. இவ்வாறு தானியங்கி முறையை கொண்டு வருவதன் மூலம் 30 சதவீத செலவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எதிர்காலத்தில் 1.60 லட்சத்திற்கும் அதிகமான புதிய ஊழியர்களை தேர்வு செய்வதை தவிர்க்க முடியும் என்றும் அந்நிறுவனம் கருதுகிறது.
இது குறித்து அமேசான் போர்டு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதை தடுக்க ரோபோக்களை பணியில் அமர்த்தலாம் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
2033ம் ஆண்டுக்குள் ஆன்லைன் வர்த்தகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருட்களை விரைவாக டெலிவரி செய்ய ரோபோக்களின் பணி அவசியம் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே பொருட்கள் பேக்கிங் மற்றும் சேமிப்பு குடோன்களில் 75 சதவீத பணிகளை தானியங்கி முறையில் மாற்றி ரோபோக்களை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடோன்களில் சில ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். ரோபோ மற்றும் மனிதர்கள் என இரண்டு பேரையும் சேர்த்து ஒரே இடத்தில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அமேசான் அதிகாரிகள் ரோபோக்கள் பற்றி விவாதிக்கையில், ரோபோக்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதில் "கோபோட்" என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் இரண்டும் சேர்ந்து வரும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து கடந்த ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வென்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாரன் அசெமோக்லு கூறுகையில், ''ரோபோக்கள்டை கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றினால் அமெரிக்காவின் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை வாய்ப்புகளை உருவாக்கிய அமேசான் நிறுவனம் வேலைவாய்ப்புகளை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனமாக இல்லாமல் வேலைவாய்ப்புகளை வாய்ப்புகளை அழிக்கும் நிறுவனமாக மாறும்'' என்று கூறினார்.

அமேசான் நிறுவனம் ரோபோகளை அறிமுகம் செய்வதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளைகளில் ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட இருக்கிறது. இது முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும். அதாவது 50 சதவீத வேலைவாய்ப்புகளைகளில் ரோபோக்கள்கள் பணியில் அமர்த்தப்பட இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் 1000 ரோபோக்கள் மனிதர்கள் துணையின்றி பணியாற்றும் வகையில் மிகவும் மேம்பட்ட கிடங்கை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.