Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்.....
லாட்டரி, மது விற்பனை மூலம் கேரள அரசுக்கு 25% வருமானம்!
கேரள அரசின் மொத்த வருவாயில் 25 சதவிகிதம் லாட்டரி மற்றும் மது விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
2023 - 24 நிதியாண்டில் லாட்டரி விற்பனை மூலம் ரூ. 12,529.26 கோடி, மது விற்பனை மூலம் ரூ. 19,088.86 கோடி உள்பட மொத்தம் ரூ. 31,618.12 கோடி கேரள அரசுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க : காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொலை: ஐ.நா.
கேரள அரசுக்கு 2023 - 24 நிதியாண்டில், மொத்த வருவாய் ரூ. 1,24,486.15 கோடி கிடைத்துள்ளது. இதில், லாட்டரி மற்றும் மது விற்பனையின் வருவாய் 25.4 சதவிகிதம் அடங்கும்.
கூடுதலாக, உரிமை கோரப்படாத லாட்டரி பரிசுத் தொகைகள் மூலம் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பதை அரசாங்கம் குறிப்பிடவில்லை. மத்திய லாட்டரி விதிகள் 2010-ன்படி, பரிசுகள் வென்று உரிமை கோரப்படாத லாட்டரிகளில் இருந்து பெறப்பட்ட நிதிகள் குறித்த விவரங்களை அரசு பராமரிக்கத் தேவையில்லை. இது நிதி வெளிப்படைத்தன்மையில் இடைவெளியை உருவாக்குகிறது.
பொதுவாக, லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்களில் சிலர் அதன் முடிவுகளை சரிபார்ப்பதில்லை, அவ்வாறான லாட்டரிகளுக்கு பரிசுத் தொகை கிடைக்கும் பட்சத்தில், அது உரிமை கோரப்படாத தொகையாக மாறுகிறது. இது மாநிலத்துக்கு கூடுதல் வருவாயாக கிடைக்கிறது.
லாட்டரி விலை
வாராந்திர லாட்டரி சீட்டுகளின் விலை கடைசியாக மார்ச் 1, 2020இல் உயர்த்தப்பட்டது. அப்போது, டிக்கெட் விற்பனைக்கான கமிஷன் 5 சதவிகிதம், பரிசுகளுக்கு முகவர் கமிஷன் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. ரூ. 100 பரிசுக்கான முகவர் தொகை ரூ. 20 ஆக மாற்றப்பட்டது.