செய்திகள் :

லாபதா லேடீஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

post image

லாபதா லேடீஸ் திரைப்படம் ஈட்டிய வருவாய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா, நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெண் கல்வி, பெண் சுதந்திரத்தை மையமாக வைத்து உருவான இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியான பின் இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது.

இதையும் படிக்க: இயக்குநர் பாலாவின் வெள்ளிவிழாவில் சூர்யா!

படத்திற்குக் கிடைத்த வரவேற்பால், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சுற்றுக்கான தேர்விலிருந்து படம் வெளியேறியது.

இந்த நிலையில், ஆச்சரியப்படுத்தும் தகவல் ஒன்று கிடைத்ததுள்ளது. லாபதா லேடீஸ் திரைப்படத்தை ரூ. 10 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் ரூ. 80 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாம்.

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் நெட்பிளிக்ஸில் ரூ. 180 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது லாபதா லேடீஸ்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 3ஆவது பாடல்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 3ஆவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகி வ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை நினைவுகள்..! மெஸ்ஸியின் வைரல் பதிவு!

கால்பந்து உலகக் கோப்பை வென்றதன் இரண்டாம் ஆண்டு நினைவுகள் குறித்து மெஸ்ஸி பதிவிட்டுள்ளார். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்..! பிரபாஸ் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

நடிகர் பிரபாஸ் நடித்துவரும் புதிய படத்தினை குறித்த வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாமென தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய பட புரோமோ!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். மிஸ்டர் பா... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியுடன் ரோஜா தொடர் நாயகன்! புதிய படமா?

ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரோஜா தொடர் முடிந்த பிறகு வேறு எந்தவொரு தொடர்களிலும் சிபு சூர்யன் நடிக்க ஒப... மேலும் பார்க்க

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? வெளியேறிய சாச்சனா பதில்

பிக் பாஸ் வெற்றியாளர் யாராக இருக்கக் கூடும் என்பது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை சாச்சனா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் போட்டியாளர்களில் ஒர... மேலும் பார்க்க