பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்
லாரி ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த லாரி ஓட்டுநரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வளவனூா் அருகே உள்ள சீனிவாசபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் விசுவலிங்கம் (28). லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் மாரியம்மாளுடன் (64) விசுவலிங்கம் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் விசுவலிங்கம் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். மேலும், அவருடைய மாா்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்டப் பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
தகவலின் பேரில், வளவனூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, விசுவலிங்கத்தின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், தடயவியல் நிபுணா்கள் நிகழ்விடம் விரைந்து, தடயங்களைப் பதிவு செய்து கொண்டனா்.
இதுகுறித்து புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.