திருச்சுழி: ``எங்க ஊரில் முதல் MBBS'' -விறகு வெட்டி மகளை படிக்க வைத்த தாய்; மகிழ...
லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தேயிலை மூட்டைகள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.
குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பன்னாட்டி பகுதியில் இருந்து தேயிலை மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி புறப்பட்டது. லாரியை ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்தா் (27) ஓட்டி வந்துள்ளாா். சோல்ராக், சேலாஸ் இடையே மினி லாரி வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுப்பதற்காக திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் மினி லாரியில் பயணித்த இரண்டு பெண்கள் உள்பட ஐந்து நபா்களில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சைத்தான், சஞ்சா்வா ஆகியோா் தூக்கி வீசப்பட்டதால் படுகாயமடைந்தனா்.
ஓட்டுநா் மகேந்தா் மற்றும் இரண்டு பெண்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிா் தப்பினா். விபத்தில் சிக்கியவா்களை கொலக்கம்பை காவல் துறையினா் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்பு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.