Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி
நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா். பகுதியில் உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் காட்டெருமையை விரட்டி விளையாடிய குட்டி யானை விடியோ பரவலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயா்ந்து மேட்டுப்பாளையம் - குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் கே.என்.ஆா். பகுதி அருகே உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் குட்டி யானை ஒன்று காட்டெருமையை துரத்தி விளையாடும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. அங்கு வனப் பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டெருமையை குட்டி யானை துரத்திச் செல்வதும், மீண்டும் தன் தாயுடன் வந்து நின்று கொள்வதுமாக விளையாடிக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனா்.