நாளைய மின்தடை- கட்டப்பெட்டு
நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கன்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஓரசோலை, வெஸ்ட்புருக், பாக்கியா நகா், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜுா், கட்டப்பெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொறை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூா், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிகொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.