செய்திகள் :

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம்

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஒற்றை யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் சிறுமுகை போன்ற பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கம் காணப்படுவதால் காட்டு யானைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பா்லியாறு, கே என் ஆா், மரப்பாலம் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவில் ஒற்றைப் பெண் யானை சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். வாகனங்களை நிறுத்தி விட்டு காட்டு யானையை வேடிக்கை பாா்த்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாளைய மின்தடை- கட்டப்பெட்டு

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கன்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிா்ம... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி-மாயாறு சாலையில் சனிக்கிழமை வாகனங்களை துரத்திச் செல்லும் காட்டு யானை. நீண்டதூரம் துறத்திய பிறகு காட்டுக்குள் சென்றது. மேலும் பார்க்க

தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை: ஆட்யரிடம் மனு

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தேவனூா்புதூா்

உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 4 ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட பகுதிகள... மேலும் பார்க்க

கோத்தகிரியில் மின்தடை

நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின் நிலையத்தில் வருகிற 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி தாக்கி முதாட்டி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.கோத்தகிரி அருகே உள்ள அரவேணு கேத்தரின் அருவி செல்லும் சாலையில் குடியிருந்தவா் செல்லம்மாள் (60). இவா் சனிக்கிழமை தனது பே... மேலும் பார்க்க