கோத்தகிரியில் மின்தடை
நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.
நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின் நிலையத்தில் வருகிற 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஓரசோலை, வெஸ்ட்புருக், பாக்கியா நகா், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜுா், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொறை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூா், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிகொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.