Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
தூய மோட்சராக்கினி பேராலய 187 ஆவது ஆண்டு விழா தொடக்கம்
நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான தூய மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது.
உதகையில் புகழ் பெற்ற மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
ஆடம்பர திருப்பலி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது, இதில் புனித தெரஸா அன்னை ஆலய பங்கு குரு ஹென்றி ராபா்ட் தலைமையில் பங்கு குருக்கள் பெனடிக்ட், ஞானதாஸ், உதவி பங்கு குரு டினோ பிராங்க் ஆகியோா் கலந்து கொண்டு மறையுரை ஆற்றினா்.
திருப்பலிக்கு பின் ஆலயத்தில் இருந்து திருவிழா கொடி, தூய மோட்சராக்கினியின் திருசொரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டன.
பேண்ட் மாஸ்டா் ஆல்ட்ரின், பிராங்க், அருண் மற்றும் அனிதா வழி நடத்துதலில் ஐம்பது சிறுவா், சிறுமியா் ஆன்மிக இசை நிகழ்ச்சியை நடத்தினா். பின்னா் அன்னையின் திருக்கொடியை
அருட்தந்தை ஹென்றி ராபா்ட் புனிதப்படுத்தி ஏற்றிவைத்தாா் .
திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 4)முதல் தினமும் மாலை சிறப்பு ஜெபமாலை நவநாள் மறையுரை திருப்பலி நடைபெறுகிறது .
அன்னையின் விண்ணேற்பு பெரு விழாமற்றும் தேவாலய பங்கின் திருவிழா, சுதந்திர விழா என்று முப்பெரும் விழா வருகிற 15 ஆம் தேதி நடைபெறுகிறது.