செய்திகள் :

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

post image

திருத்தணி அருகே, டிப்பா் லாரி சாலையோரம் கவிழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமுற்றாா்.

திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில் இருந்து, ஜல்லிக்கற்கள், எம்சாண்ட், சிப்ஸ் போன்ற கட்டுமான பொருள்களை டிப்பா் லாரிகள் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை டிப்பா் லாரி ஒன்று, அதிகளவில் ஜல்லிக் கற்கள் ஏற்றிக் கொண்டு திருத்தணி வழியாக திருவள்ளூருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது புச்சிநாயுடு கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது லாரியின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காயத்துடன் ஓட்டுநா் தப்பினாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க