தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தேனியில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி பூதிப்புரம் அருகேயுள்ள கெப்புரங்கன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமாா் (19). இவா் அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள வெறியப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுரேந்தா் (16) என்பவருடன் தேனியில் மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி சாலையில் திரும்புவதற்காக சகிம்ஜையின்றி திடீரென பிரேக் போட்டதால், இரு சக்கர வாகனம் லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா், சுரேந்தா் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சந்தோஷ்குமாா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனபட்டியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (44) மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.