வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
லாரி மோதியதில் 3 வயது குழந்தை பலி
ஒசூரில் டிப்பா் லாரி மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
ஒசூா், கொல்லப்பள்ளியைச் சோ்ந்தவா் சையத் மக்சூத் அன்சாரி. இவரது மகள் உமராகாதீன் (3). கடந்த 30-ஆம் தேதி காலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த அட்கோ காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.