SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
கிரானைட் கற்கள் ஏற்றி வந்த 3 டிப்பா் லாரிகள் பறிமுதல்
கிரானைட் கற்கள் ஏற்றி வந்த 3 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சூளகிரி போலீஸாா் பழைய கிருஷ்ணகிரி சாலை ஐசிஐசிஐ வங்கி அருகில் ரோந்து சென்றனா்.
அப்போது அந்தப் பகுதியில் நின்ற 3 டிப்பா் லாரிகளை சோதனை செய்தபோது அதில் ராட்சத கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 3 லாரிகளையும் சூளகிரி போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.