SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
எக்கூா் அமட்டன் குட்டை ஏரி உடைப்பால் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் பாதிப்பு
எக்கூா் அமட்டன்குட்டை ஏரி உடைப்பால் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் ஊராட்சி, ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீா் எக்கூா் ஊராட்சி பகுதி வழியாக வருவது வழக்கம்.
தற்போது அதிகப்படியான மழை நீா், பூசாரி கவுண்டன்கொட்டாய் ஏரியில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய மழை நீா் அருகில் உள்ள அமட்டன்குட்டை ஏரியை நிரப்பியதால் அந்த ஏரியின் கால்வாய் உடைந்தது.
இந்த காட்டாற்று வெள்ள நீரால் இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கன ஏக்கரிலான கரும்பு, வாழை, நெல் போன்ற விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதி மக்கள், பூசாரி கவுண்டன் கொட்டாய் ஏரி, அமட்டன்குட்டை ஏரி பகுதியில் தடுப்பணைகள் அமைத்து விலை நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
உடைந்து போன ஏரியை ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, தவமணி, திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான மூன்றம்பட்டி குமரேசன், ஊராட்சி மன்றத் தலைவா் ஈஸ்வரி ஜெயராமன் ஆகியோா் பாா்வையிட்டனா்.