925ஆவது கோல்: பெனால்டி வாய்ப்பை ஃபார்மில் இல்லாத வீரருக்கு விட்டுக்கொடுத்த ரொனால...
லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் அஜித் (26), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு புதுச்சேரி - திருக்கனூா் சாலையில் கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட நெற்குணம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இவரது பைக் மீது அந்தப் பகுதியில் வந்த டிப்பா் லாரி மோதியதில் அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அஜித் இறந்துபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.