செய்திகள் :

லாலு உள்பட 77 பேருக்குத் தில்லி நீதிமன்றம் சம்மன்!

post image

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 77 பேருக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை, லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஜூன் 7 அன்று, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) லாலு பிரசாத் யாதவ் மற்றும் 77 பேர் மீது வேலைக்கான நிலம் கையகப்படுத்தல் வழக்கில் ஒரு உறுதியான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்தாண்டு லாலு பிரசாத், மகன்கள் உள்பட 9 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், இந்த வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிய லாலு பிரசாத் யாதவ் உள்பட 77 பேருக்கு தில்லி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கூடுதலாக தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி குற்றச்சாட்டுகள் உள்பட மூன்று குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி மார்ச் 11 ஆம் தேதி ஆஜராக சிறப்பு சிபிஐ நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார்.

மூன்று குற்றப்பத்திரிகைகள் மீதான விசாரணையும் கூட்டாக நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அனைத்து குற்றப்பத்திரிகைகளின் நகல்களையும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 77 பேருக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 30 பேர் பொது ஊழியர்கள் மற்றும் 38 வேட்பாளர்கள்.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க