செய்திகள் :

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

post image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கிருந்து 10,000-க்கும் மேற்பட்டவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால், காற்று கடுமையாக வீசியதே காட்டுத் தீ அதிவேகமாகப் பரவியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். எனினும் காற்று மீண்டும் வலுவடையக் கூடும் என்று அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது.

காட்டுத் தீயில் சிக்கி ஏற்கெனவே 11 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவ பரிசோதகா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோ பரப்பளவைவிட அதிகம்: காட்டுத் தீ 56 சதுர மைல்களை (145 சதுர கி.மீ.) அழித்துள்ளது. இது சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் பரப்பளவைவிட அதிகம்.

இந்தக் காட்டுத் தீயால் 135 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.11.63 லட்சம் கோடி) முதல் 150 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.12.92 லட்சம் கோடி) வரை பொருள் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இதுவே காட்டுத் தீயால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சரின் சொத்துகள் குறித்து விசாரணை: முகமது யூனுஸ் வலியுறுத்தல்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சா் துலீப் சித்திக்கின் லண்டன் சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வலியுறுத... மேலும் பார்க்க

கனடா பிரதமா் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சா் அனிதா ஆனந்த்

கனடாவில் பிரதமா் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளாா். ஆளும் லிபரல் கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்தும், பிரதமா் ... மேலும் பார்க்க

கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது: டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமா் பதிலடி

‘கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாகிஸ்தானியா்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளா்த்தியது வங்கதேசம்

பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளா்த்தியுள்ளது. அந்நாட்டுடன் வா்த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவ... மேலும் பார்க்க

வடசீனாவில் குறையும் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு

சீனாவின் வடக்குப் பகுதிகளில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார ஆய்வாளா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். கரோனா தொற்றைப்போல் எச்எம்பி தீநுண... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ்: காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம்! பலி 16-ஆக உயர்வு!

அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரியதொரு பேரிடராக லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் கொளுந்துவிட்டு எறியும் காட்டுத்தீ உருமாறியுள்ளது.அங்கு சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதிகளில் தீப்பற்றி எ... மேலும் பார்க்க