மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!
லிப்ஸ்டிக் சட்னி டு தொட்டாச்சிணுங்கி கூட்டு- அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்களால் கமகமத்த சென்னை
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 12-வது இடமாக தென் சென்னையில் நடைபெற்றது.
சாந்தோம் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 111 பேர் கலந்துகொண்டனர்.

சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா, ஜோஷ் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின.
முதல் கட்டமாக போட்டியாளர்கள் இரண்டு குழுவாக பிரிந்து தாங்கள் சமைத்ததை நடுவர் செஃப் தீனாவின் முன் காட்சிப்படுத்தினர்
கதம்ப இட்லி, பனங்கிழங்கு குலாப் ஜாமூன், லிப்ஸ்டிக் சட்னி, மாப்பிள்ளைச் சம்பா கொழுக்கட்டை, வாட்டர்மெலன் கேரட் ரசம், இளநீர் சில்லி ஃப்ரை, ஆவாரம், செம்பருத்தி, தாமரை மலர்கள் கொண்டு செய்த மலர்பானம், கறுப்பு எள் இறால் கிரேவி, தாமரை விதை புலாவ், பூசணிவிதை கீர்,வெந்தயக் கீரை நக்கட்ஸ், கருப்பட்டி கஞ்சி, கேழ்வரகு புட்டிங், கொரியன் பொட்டேட்டோ பால்ஸ், சப்பாத்தி, மாந்தளிர் கொய்யா துவையல் என குமரிமுனையில் தொடங்கி கொரியா வரையுள்ள உணவு வகைகளை சமைத்து அசத்தினர். பெரியோர் மத்தியில் சிறுவனாக நெருப்பில்லாமல் சமைக்கும் No oil, No boil முறையில் ரோஜா குதிரைவாலி பாயாசம் செய்து மிரளவைத்தார்.










இதில் முந்திரி கேக் செய்த லலிதா வெங்கட்ராமன், மாலிக்குலர் காஸ்ட்ரோனாமி மூலம் உணவுகளை படைத்த மோகனா ஜெகதீசன், கம்பு களி மற்றும் கூழ் செய்த சாந்தி, வல்லாரை குழம்பு செய்த சாந்தி ராஜேந்திரன், மருந்து குழம்பு செய்த சகாயராணி, கல்யான கொத்சு மற்றும் உப்மா கொழுக்கட்டை செய்த பிரியா ராமகிருஷ்ணன், வெற்றிலை பாயாசம் செய்த சோனியா, நெல்லிக்காய் பொரியல் செய்த கோகிலவாணி, புளியங்கொட்டை பாயாசம் செய்த கலைச்செல்வி, பனங்கிழங்கு குலாப்ஜாமூன் செய்த சாந்தினி என மொத்தம் 10 பேர் அடுத்த கட்டத்துக்கு தேர்வாகினர்.
இவர்களில் மோகனா ஜெகதீசன், சாந்தி மற்றும் கலைச்செல்வி
ஆகியோர் சிறப்பான சமையலுக்காக தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடக்கவுள்ள " சமையல் சூப்பர் ஸ்டார் -சீசன் 2 "வின் இறுதி சுற்றில் பங்கேற்க உள்ளனர்.
இறுதிகட்ட போட்டி சென்னை கொளத்தூரி்ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.