செய்திகள் :

லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

post image

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா - பிரான்சின் ஒப்பந்தம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகை தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி, புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும். இதனால், லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போர் முடிவுக்கு வரும். போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும். இது இரு நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆஸி.: சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை மசோதா நிறைவேற்றம்!

ஆஸ்திரேலியாவில் சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமா் பரிந்துரை

லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அம... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக விசாரணை நடத்த, துணை அதிபா் சாரா டுடோ்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினா் போராட்டத்தில் வன்முறை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழ... மேலும் பார்க்க

வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் போராட்டம்

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்த அந்நாட்டு ந... மேலும் பார்க்க