செய்திகள் :

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

லெவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியான படம் 'லெவன்'. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னோட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படம் கடந்த மே 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்துக்காக ’தமுகு’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டு, சரிகம தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், லெவன் படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன்!

பிசாசு - 2 எப்போது வெளியாகும்? மிஷ்கின் பதில்!

நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்த பிசாசு - 2 படத்தின் வெளியீடு குறித்து மிஷ்கின் பேசியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர... மேலும் பார்க்க

லெவண்டாவ்ஸ்கி உடனான மோதல்: போலந்து அணி தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

போலந்து கால்பந்து அணியில் உள்ள வீரருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா செய்துள்ளார். போலந்து கால்பந்து அணிக்காக 2023-இல் இருந்து தலைமைப் பயிற்சியாளராக மைக்கேல் ப்ரோபியர்ஸ... மேலும் பார்க்க

பொன்னி சீரியலைத் தொடர்ந்து நிறைவடையும் பிரபல தொடர்!

பொன்னி சீரியலைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.இத்தொடரில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்... மேலும் பார்க்க

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் மாதவன்?

இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் நடிகர் மாதவன் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வை... மேலும் பார்க்க

ஓடிடியில் ஆலப்புழா ஜிம்கானா!

மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆலப்புழா ஜ... மேலும் பார்க்க

பெயர் மாற்றப்பட்ட ‘தி தில்லி ஃபைல்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!

’தி தில்லி ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டு புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கிய படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அதன் இயக்குநர் விவே... மேலும் பார்க்க