செய்திகள் :

`வகுப்பறை முக்கியத்துவத்தை கழிப்பறைக்கும் தர வேண்டும்’ - சிரமப்படும் காரப்பட்டு அரசுப்பள்ளி மாணவிகள்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் பிரதான சாலையோரமாக அமைந்திருக்கிறது `காரப்பட்டு’ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், ஊமையனூர், வண்ணாம்பள்ளி, சந்தகொட்டாவூர், தகரப்பட்டி, கதவணி, தாதக்குள்ளனூர், ஆதாலியூர், வளத்தானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு குக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கற்பித்தல் தரம் காரணமாக மாணவர்களுக்கு நிகராக மாணவிகளின் சேர்க்கையும் சரிப்பாதியாக இருக்கிறது.

காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி

கற்பித்தல் மற்றும் கற்றல் நோக்கங்களால், இப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆண்டுதோறும் பள்ளியின் தேர்ச்சிவிகிதமும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், போதுமான அளவுக்கு சுகாதார வசதிகளுடன் கழிப்பறைகள் இல்லாதது, மாணவ, மாணவிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

மாணவர்கள் பயன்பாட்டுக்காக 4 யூனிட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு யூனிட்டில் 2 யூரினல், 1 டாய்லெட் இருக்கின்றன. மாணவிகள் பயன்பாட்டுக்கும் இதே எண்ணிக்கையில்தான் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், நீண்ட நேரம் கழிப்பறைக்கு வெளியே மாணவ, மாணவிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை தினந்தோறும் ஏற்படுகிறது.

காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை

``சுகாதாரமான முறையில் சானிட்டரியும் செய்யப்படுவதில்லை. கழிப்பறை அறையின் கதவுகள் செல்லரித்து உடைந்துவிட்டன. அதை மாற்றாததால், கழிப்பறை அறையை பயன்படுத்த முடிவதில்லை. தரை, சுவர் என எங்குப் பார்த்தாலும் கறை படிந்திருக்கின்றன. சரியான தண்ணீர் வசதியும் இல்லை. மாதவிடாய் காலத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறோம்’’ என்கிற குற்றச்சாட்டையும் மாணவிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், ``வகுப்பறைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை கழிப்பறைகளுக்கும் தர வேண்டும்’’ எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தவெக விஜய்: "35 நிமிடங்களே பரப்புரை, பொது சொத்து சேதமடைந்தால்..." - காவல்துறை விதித்த நிபந்தனைகள்!

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (செப் 20) சனிக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்,இந்த பிரசாரத்துக்... மேலும் பார்க்க

”என் உணவகத்தில் ரூ.50 தான் வியாபாரம் ஆனது” - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் புலம்பிய கங்கனா!

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது உணவகத்தில் ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆகுவதாக தனது சொந்த நஷ்டத்தைப் பற்றி மக்க... மேலும் பார்க்க

அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோரின் கோரிக்கை என்ன?

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது... மேலும் பார்க்க

``அமெரிக்காவின் கூடுதல் வரி வேலைக்கு ஆகாது'' - இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா

உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால்,... மேலும் பார்க்க

வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்பு... மேலும் பார்க்க

``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜக தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வர... மேலும் பார்க்க