வக்ஃப் நிலத்தை அபகரித்த கார்கே.. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு
புது தில்லி: வக்ஃப் வாரிய நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அபகரித்திருந்ததாக, பாஜக எம்.பி. அனுராக் கூறிய குற்றச்சாட்டுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பேசிய எம்.பி. மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அனுராக் தாக்குர் பேசியிருக்கிறார் என்றார்.
மேலும், தனக்கு எதிராக வைக்கப்பட்டக் குற்றச்சாட்டை அனுராக் தாக்குர் நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே, அவ்வாறு நிரூபித்தால், தான் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கின்றன.