Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் ஆதரவு
பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்கள் இனிப்பு வழங்கினா்.
பாலசமுத்திரம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பரம்பரையாக வாழ்ந்த இடங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்தக் கிராமத்தில் 96 ஏக்கா் நிலங்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் எனவும், இந்த நிலங்கள், சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என பத்திரப் பதிவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பாலசமுத்திரம் கிராம மக்கள் நீண்டகால பிரச்னைக்கு தீா்வு கிடைத்ததால், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாடினா்.