செய்திகள் :

வங்கதேசத்தில் கைதான ஹிந்து அமைப்பு தலைவருக்கு பிணை மறுப்பு!

post image

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக கிருஷ்ணா தாஸ் உள்பட 19 போ் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வங்கதேசத்தின் இஸ்கான் கோயில் தலைமை ஆன்மிக குருவாக இருக்கும் சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை கண்டித்து, மேற்கு வங்கத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்

இந்த நிலையில், சின்மய் கிருஷ்ண தாஸ் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சட்டோகிராம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சின்மய் கிருஷ்ண தாஸுக்காக டக்கா உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த 11 வழக்கறிஞர்கள், சட்டோகிராம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதத்தை முன்வைத்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் வாதத்துக்கு பிறகு பிணை தர மறுப்பு தெரிவித்து அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையையொட்டி, கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக ஹிந்துக்கள் அதிகளவில் நீதிமன்றத்தில் கூடியதால், பலத்த பாதுகாப்பு மத்தியில் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே, இஸ்கான் அமைப்பை தடை செய்யக் கோரி, வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடா: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

ஒட்டாவா: ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா முடிவை நாளை மறுநாள் புதன்கிழமை (ஜன. 8) அறிவி... மேலும் பார்க்க

கனடா பிரதமர் விரைவில் ராஜிநாமா?

ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது ராஜிநாமா முடிவை நாளை மறுநாள் புதன்கிழமை (ஜன. 8) அறிவிப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்ட... மேலும் பார்க்க

வட கொரியாவுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள ரஷியா ஆயத்தம் -அமெரிக்கா

சியோல்(தென் கொரியா): தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் விண்வெளித்துறை சார் நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதில் வட கொரியா ரஷியாவுடன் இணைந்து நெருக... மேலும் பார்க்க

இந்தோனேசியா: பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்!

இந்தோனேசியாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28 மில்லியன் டாலர்கள் செலவில் நாடு முழுவதும் திங்கள்கிழமை(ஜன. 6) இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

தென் கொரியா: முன்னாள் அதிபருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்

தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் தென் கொரிய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கடன்: உலக வங்கி முடிவு

பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலா்) கடன் வழங்க உலக வங்கி விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. நிலையற்ற அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க