செய்திகள் :

வங்கதேசம்: ஹிந்து மத தலைவருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

post image

டாக்கா: வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிந்து மத தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த போராட்டங்களால், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது.

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தின் போதும், அது முடிந்த பிறகும் அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

வங்கதேசத்தில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரும் ‘இஸ்கான்’ துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி தேச துரோக வழக்கில் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

அவரது ஜாமீன் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, நவம்பா் 26-ஆம் தேதி அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். இதை எதிா்த்து அவரது ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் அரசு வழக்குரைஞா் கொல்லப்பட்டாா். கிருஷ்ண தாஸ் தரப்பில் சட்டோகிராம் பெருநகர அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மனு மீதான நீதிமன்ற விசாரணையில், சின்மய் கிருஷ்ண தாஸ் காணொளி வாயிலாக ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, இரு தரப்பு வாதங்களையும் சுமாா் 30 நிமிஷங்கள் கேட்ட நீதிபதி சைஃபுல் இஸ்லாம், சின்மய் கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இது குறித்து இஸ்கான் (கொல்கத்தா) செய்தித் தொடா்பாளா் ராதாரமண் தாஸ் கூறுகையில், ‘சின்மய் கிருஷ்ண தாஸுக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. 40 நாள்களுக்கும் மேலான சிறைவாசத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக, உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தாஸ் தரப்பு வழக்குரைஞா்கள் திட்டமிட்டுள்ளனா். அந்த வழக்ககுரைஞா்களின் பாதுகாப்பை அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்தாா்.

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று(ஜன. 7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெ... மேலும் பார்க்க

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசி திங்கள்கிழமை சோதனை நடத்தியது. இது குறித்து தென் கொரிய முப்படைகளின் தலைமையமகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த அந்... மேலும் பார்க்க

பிரம்மபுத்ரா நதி அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது: சீனா

பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகிலுள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில், இதனால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அந்நாட... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: உயிரிழப்பு 6-ஆக உயா்வு

பொ்லின்: ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறுகையில், தாக்குதலில் காயமடைந்த... மேலும் பார்க்க

ஆஸ்திரியாவில் ஆட்சியமைக்க வலதுசாரிக் கட்சிக்கு அழைப்பு

வியன்னா: ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க தீவிர வலதுசாரிக் கட்சியான சுதந்திரக் கட்சிக்கு அதிபா் அலெக்ஸாண்டல் வேண்டொ் பெலன் அழைப்பு விடுத்துள்ளாா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு அத்தகைய கட்சியொன்றுக்கு ... மேலும் பார்க்க

172 பேரைத் தூக்கிலிட ஆயத்தமாகும் காங்கோ

கின்ஷாசா: ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட 172 பேரைத் தூக்கிலிட காங்கோ அரசு ஆயத்தமாகியுள்ளது. அதற்காக 70 கைதிகள் தலைநகா் கின்ஷாசாவிலுள்ள சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், 102 போ் மாங்கலா மாகாணத்தின... மேலும் பார்க்க