22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை' நீக்கம்
டாக்கா: வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.
இது குறித்து அரசியல் சாசன சீர்திருத்தக் குழு புதன்கிழமை சமர்ப்பித்துள்ள பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் அரசமைப்புச் சட்டத்திலுள்ள மூன்று அடிப்படைக் கொள்கைகளில் இருந்து 'மதச்சார்பின்மை, சோஷலிசம்' ஆகியவை நீக்கப்பட வேண்டும். 'ஜனநாயகம்' என்ற வார்த்தை மட்டும் தொடர்ந்து இருக்கலாம். அத்துடன், சமத்துவம், மனித கெüரவம், சமூக நீதி, பன்முகத்தன்மை ஆகியவை அடங்கிய நான்கு அடிப்படைக் கொள்களை புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேச சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது மாணவர்கள் கடந்த ஆண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு, முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசியல் சாசன சீர்திருத்தக் குழு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.