செய்திகள் :

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு!

post image

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிச.15 அன்று ஐஐஎப்சி வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஷகிப் அல் ஹசனுக்கு சொந்தமான அல்-ஹசன் அக்ரோ ஃபார்ம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் ஐஐஎப்சி வங்கியில் பலமுறை கடன் வாங்கப்பட்டதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலைகள் அனைத்தும் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததினால் செல்லுபடியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இதனைத் தொடர்ந்து, ஷகிப் அல் ஹசன், அவரது நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்த மேலும் 3 பேரின் மீதும் வங்கியின் சார்பில் டாக்கா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த டிச.18 அன்று விசாரித்த நீதிமன்றம் அவரை ஜன.19 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் ஆஜராகாததினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் மகுறா தொகுதி எம்.பி. ஆன ஷகிப் அல் ஹசன், ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டப் போது நாடுத் தப்பினார்.

ஏற்கனவே, அந்நாட்டில் ஏற்பட்ட மாணவர் புரட்சியின்போது அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி வங்கதேசத்திற்கு திரும்ப மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோப்போர் மாவட்டத்தின் ஜலூரா குஜ்ஜார்பதி பகுதியில் பயங்கரவா... மேலும் பார்க்க

முன்னாள் மனைவியைக் கட்டிவைத்து ஆசிட் தாக்குதல் நடத்தியவர் கைது!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தனது முன்னாள் மனைவியைக் கட்டிவைத்து அவர் மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சவாய் மதோப்பூரில் அரசு கல்வி நிறுவனத்தின் ஆசிரியராக பணிபு... மேலும் பார்க்க

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு விருது!

நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ எனும் குறும்படம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும்... மேலும் பார்க்க

விருதுகளைக் குவித்த ‘தி சீட் ஆப் தி சாக்ரெட் ஃபிக்’ திரைப்படம் இந்தியாவில் வெளியீடு!

ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை மையமாக வைத்து உருவான அந்நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர் முஹம்மது ரசூலொஃபின் இயக்கிய ‘தி சீட் ஆப் தி சாக்ரெட் ஃபிக்’ (The seed of the sa... மேலும் பார்க்க

கார் தாக்குதலில் 35 பேரைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேரைக் கொலை செய்த 62 வயது நபருக்கு இன்று (ஜன.20) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஜூஹாய் மாகாணத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபான் வெய்குயி (வயது 62)... மேலும் பார்க்க

‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்தப்படம் துவக்கம்!

2023 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று (ஜன.19) நடைபெற... மேலும் பார்க்க