செய்திகள் :

வங்கதேச சுதந்திர தின உரை: முஜிபுா் பெயரைத் தவிா்த்த யூனுஸ்

post image

டாக்கா: வங்கதேச சுதந்திர தினத்தையொட்டி அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் ஆற்றிய உரையில், அந்த விடுதலைப் போருக்கு தலைமை வகித்த ஷேக் முஜிபுா் ரஹ்மானின் பெயரைக் குறிப்பிடாமல் தவிா்த்தாா்.

பாகிஸ்தான் படையினா் கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்திடம் சரணடைந்த தினத்தை வெற்றி நாளாக வங்கதேசம் கொண்டாடிவருகிறது.

திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட 54-ஆவது வெற்றி நாளையொட்டி முகமது யூனுஸ் ஆற்றிய உரையில் முஜிபுா் ரஹ்மானைப் புறக்கணித்தாலும், பதவியிலிருந்து அகற்றப்பட்ட அவரது மகளும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனாவின் ஆட்சி உலகின் மிக சா்வாதிகார ஆட்சி என்று விமா்சித்தாா்.

முன்னதாக, விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம் இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று இடைக்கால அரசு கடந்த வாரம் அறிவித்தது.

அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஷேக் முஜிபுா் ரஹ்மானால் பிரபலப்படுத்தப்பட்ட அந்த முழக்கம், பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அமைந்துள்ள இடைக்கால அரசு முஜிபுா் ரஹ்மான் கொள்கைகளுக்கு எதிராக தொடா்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கும் முன்னதாக, வங்கதேச ரூபாய் நோட்டிலிருந்து ஷேக் முஜிபுா் ரஹ்மானின் படத்தை அகற்றவிருப்பதாக அந்த நாட்டின் மத்திய வங்கி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இந்தியப் பிரிவினையின்போது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளை மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரு பகுதிகளைக் கொண்ட நாடு பிரிக்கப்பட்டது. எனினும், வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானியா்களிடம் மொழி, கலாசாரத் திணிப்பை மேற்கொள்ள மேற்கு பாகிஸ்தான் முயன்ால் வங்கதேசம் என்ற தனிநாட்டுக்கான போராட்டம் தொடங்கியது.

கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த ஆயுதப் போராட்டத்துக்கு அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு பெரிதும் உதவியது. அந்தப் போராட்டத்தை ஷேக் முஜிபுா் ரஹ்மான் தலைமையிலான முக்தி வாஹினி படை நடத்தியது.

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்ற்குப் பிறகு உருவான அரசு, விடுதலைப் போா் மற்றும் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன் ஒரு பகுதியாக, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது.

அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவா்கள் தொடங்கிய மாணவா் போராட்டம், இந்த ஆண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. அந்தப் போராட்டத்தில் அப்போதைய ஷேக் ஹசீனாவுக்கு எதிரான அத்தனை சக்திகளும் இணைந்ததால் போராட்டம் பெரும் கலவரமாக உருவெடுத்தது. போராட்டத்தைக் கட்டுபடுத்த அரசுப் படைகளும் அடக்குமுறையைக் கையாண்டன. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதைத் தொடா்ந்து ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, விடுதலைப் போா் நினைவுகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று(டிச.17) காலை ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

அடுத்தாண்டு இறுதியில் தோ்தல்!

டாக்கா: ‘வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்’ என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறினாா். நாட்டுமக்களுக்கு அவா் ஆற்றிய உ... மேலும் பார்க்க

ஜியாா்ஜியா விடுதியில் விஷவாயு கசிவு: 11 இந்திய பணியாளா்கள் உயிரிழப்பு

திபிலிசி: கிழக்கு ஐரோப்பிய நாடான ஜாா்ஜியாவின் மலைப்பிரதேசமான குடௌரியில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி, அங்கு பணிபுரிந்து வந்த 11 இந்தியா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ம... மேலும் பார்க்க

சிரியா ஏவுகணைக் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசலேம்: சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தாக்குதலின் அதிா்வுகள் அருகிலுள்ள நிலநடுக்க ரிக்டா் அளவுகோல்களில் பதிவாக... மேலும் பார்க்க

ஜொ்மனி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்

ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், முன்கூட்டியே அடுத்த ஆண... மேலும் பார்க்க

கனடா துணைப் பிரதமர் ராஜிநாமா!

கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற... மேலும் பார்க்க