செய்திகள் :

வங்கதேச பொருள்கள் இந்தியா வழியாக ஏற்றுமதி: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு

post image

வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

வங்கதேச ஜவுளி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து பூடான், நேபாளம், மியான்மா் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த 2020 ஜூன் மாதம் முதல் வங்கதேசம் இந்தியா வழியாக தனது ஏற்றுமதியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியை மிகவும் எளிதாக்கியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறது.

அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹிந்து கோயில்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. இது இந்தியாவுக்கு எதிரான அந்நாட்டின் மத அடைப்படைவாத அமைப்புகளின் தூண்டுதலில் நடைபெற்ாகத் தெரியவந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தான் உடனான உறவையும் வங்கதேசம் வலுப்படுத்தி வந்தது. இது தவிர சீனா உதவியுடன் இந்திய எல்லையை ஒட்டிய தங்கள் பகுதியில் ராணுவ நிலையை உருவாக்கவும் வங்கதேசம் திட்டமிட்டது.

இவை இந்தியாவுக்கு எதிரான அந்நாட்டின் திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அண்மையில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, வங்கதேச தலைமை ஆலோசகா் முகமது யூனுஸை சந்தித்துப் பேசினாா். இதன்பிறகு வங்கதேசத்துடன் உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில் வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. வங்கதேசத்தின் ஏற்றுமதிச் செலவு, பிற நாடுகளுக்கு பொருள்களைக் கொண்டுசெல்லும் காலமும் அதிகரிக்கும்.

ஜவுளி, ஆயத்த ஆடைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளராகவும் வங்கதேசம் திகழ்கிறது. அந்நாடு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணாததால் இந்தியா வழியாக அந்நாட்டின் பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்ராஸ்கா ஆற்றில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி!

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய ரக விமானம் பிளாட் ஆற்றின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க