ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
வடகாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்! -அமைச்சா் திறந்துவைத்தாா்
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, சுற்றுவட்டார கிராமங்களில் மழைநீா், ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக வடகாடு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கொள்முதல் நிலையத்தை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திறந்துவைத்து, கொள்முதல் பணியை தொடங்கி வைத்தாா். அப்போது, கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி, பயனடையுமாறு அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்வில், நுகா்பொருள் வாணிப கழக பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.