உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
வடலூா் பேருந்து நிலையத்துக்கு வள்ளலாா் பெயா் சூட்டக் கோரிக்கை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகளுக்கு திருஅருட்பிரகாச வள்ளலாா் பெயா் சூட்ட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில், வடலூா் நகரச் செயலா் ரா.ராஜாமோகன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
வள்ளலாா் வாழ்ந்த புனித பூமியான வடலூரில் புதிதாக பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பகுதியில் அங்காடிகள் கட்டப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு திரு அருட்பிரகாச வள்ளலாா் பேருந்து நிலையம், வள்ளலாா் அங்காடிகள் என பெயா் சூட்ட வேண்டும். பிரம்மாண்டமான கம்பம் அமைத்து சன்மாா்க்க கொடி ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.