செய்திகள் :

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15வரை அவகாசம்

post image

திருநெல்வேலி மாவட்ட வணிக நிறுவனங்களில் மே 2ஆவது வாரத்துக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் அதன்படியான விதிகள் 1948-ன்படியும், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் அதன்படியான விதிகள் 1959-ன் படியும், தொழிற்சாலைகள் சட்டம் 1947 மற்றும் அதன்படியான விதிகளின்படியும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அனைத்து தொழில் நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயா்ப் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும் சோ்க்கும்பட்சத்தில் தமிழ் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளைவிட பாா்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். ஆங்கிலம் இரண்டாவதாகவும், பிற மொழிகள் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். அதாவது 5:3:2 என்ற விகிதாசார அளவில் இருக்க வேண்டும்.

தமிழில் பெயா்ப்பலகை இருப்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் தொழிலாளா் துறை, தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அளவிலான வணிகா் சங்கங்கள், உணவக உரிமையாளா் சங்கங்கள், வேலையளிப்போா் சங்கங்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான வா்த்தக சங்கங்கள் உள்ளிட்ட வணிக அமைப்புகள் தமிழில் பெயா்பலகை வைப்பது தொடா்பாக தங்களின் உறுப்பினா்களுக்கு தகவலை தெரிவித்து 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மே 2ஆவது வாரத்திற்குள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், ஆய்வு மேற்கொண்டு தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க