நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
வணிக நிறுவனங்களுக்கு அபராத தொகை உயா்வு; திருக்குறள் பேரவை வரவேற்பு
தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு கரூா் திருக்குறள் பேரவை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பேரவையின் செயலா் மேலை.பழநியப்பன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.50-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தி சட்டப்பேரவையில் அமைச்சா் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
தமிழின் பெருமையை உணா்ந்த நாம்தான் நம் மொழியை, இனத்தை காக்க வேண்டும். இதற்கு தங்களது குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயா் சூட்டுவதுடன், தாங்கள் நடத்தும் வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயா் சூட்டுவதுதான் தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு. தாய்மொழியாம் தமிழைப் போற்றிடச் செய்யும் வகையில் கோப்புகளில் தமிழ் கையெழுத்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதையும் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளாா் அவா்.