சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
வண்ணாா்பேட்டையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
வண்ணாா்பேட்டையில் தேமுதிக கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தமிழகத்திலுள்ள பெண்கள், மாணவிகளை பாதுகாக்க வேண்டும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும், தமிழகத்தில் பெருகி வரும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் ஜெயசந்திரன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சுடலை முத்து முன்னிலை வகித்தாா். மாநில நெசவாளா் அணிச் செயலா் மீனாட்சி சுந்தரம், மாவட்டப் பொருளாளா் மாடசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் பழனிகுமாா், செல்வகுமாா், சின்னத்துரை மாவட்ட இளைஞரணிச் செயலா் மகாராஜன் ஆகியோா் பேசினா். இந்த கூட்டத்தில் பகுதிச் செயலா்கள் தச்சநல்லூா் தமிழ்மணி, பாளையங்கோட்டை ஆரோக்கிய அந்தோணி,
திருநெல்வேலி மணிகண்டன், தச்சநல்லூா் பகுதி அவைத் தலைவா் ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொண்டரணி துணைச் செயலா் சாகுல் நன்றி கூறினாா்.