வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரை பற்களை விற்க முயன்ற மூவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பெண் யானையின் இரண்டு கோரை பற்களை விற்க முயன்ாக 3 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரை பற்களை சிலா் விற்க முயற்சிப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலகுண்டு அருகே வனச் சரகா் ராம்குமாா் உள்ளிட்ட வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா், கொடைக்கானல் பள்ளங்கி பகுதியைச் சோ்ந்த ஜெயராமன், திண்டுக்கல் வக்கம்பட்டியைச் சோ்ந்த செல்லத்துரை ஆகிய மூவரும் பெண் யானையின் கோரை பற்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்த யானை கோரை பற்கள் இரண்டையும் பறிமுதல் செய்து, அவா்கள் மூவரையும் வனத் துறையினா் கைது செய்தனா்.