செய்திகள் :

வத்தலகுண்டு பேரூராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

post image

வத்தலகுண்டு பேரூராட்சியில் ரூ.1.96 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி, காந்திநகரில் ரூ.30 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். 

வத்தலகுண்டுவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

வத்தலகுண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1.25 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்துக்கும், கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.49 லட்சத்தில் 8-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை, வடிகால் சிறுபாலம், தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

சி.எஸ்.ஆா். நிதி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சத்தில் புதுப்பட்டி, காந்திநகரில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையங்களை திறக்கப்பட்டன.

வத்தலக்குண்டு பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.35.41 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வரும் 8.8.2025-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றாா் அவா்.

இதில் பேரூராட்சித் தலைவா் பா.சிதம்பரம், துணைத் தலைவா் இரா.தா்மலிங்கம், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இரா.ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் ஆ.சரவணக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க