ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு
வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உணவு விருப்பங்களை தேர்வு செய்யாவிட்டாலும் கூட ரயிலில் ஏறிய பிறகும் உணவு வாங்கிக் கொள்ளும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் முன்பதிவு செய்யும்போது உணவு வேண்டும் என்று பதிவு செய்யாத பயணிகள் கூட, ரயிலில் பயணிக்கும்போது, ஐஆர்சிடிசியின் உணவுப் பொருள்கள் விற்பனை சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது, டிக்கெட் முன்பதிவின் போது உணவு வேண்டும் என்று தேர்வு செய்யாத பயணிகள், ரயிலில் பயணிக்கும்போது, பணம் செலுத்தி உணவுபெற விரும்பினாலும் கூட ஐஆர்சிடிசி ஊழியர்கள் அவர்களுக்கு உணவு வழங்குவதில்லை என்று நிறைய பயணிகள் அவ்வப்போது புகார் கூறுவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்பதிவின் போது, உணவு தேர்வு செய்யாத பயணிகளுக்கும், ரயிலில் சுத்தமான தரமான உணவு வழங்குவதை ஐஆர்சிடிசி உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.