செய்திகள் :

வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்

post image

தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது.

இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு வனத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு மேலாண்மைத் திட்ட மேம்பாட்டுப் பிரிவில் தற்காலிக இளநிலை ஆராய்ச்சியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இதில், உயிரியலாளா் பதவிக்கு வனவிலங்கு அறிவியல், வனவிங்கு உயிரியல், உயிரியல், வனத்துறை, தாவரவியல், சூழலியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், தாவர அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். சமூவியலாளா் பதவிக்கு சமூகவியல், மானுடவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆராய்ச்சி துறையில் இரு ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.31,100 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் ‘முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் அலுவலகம், வேளச்சேரி சாலை, கிண்டி, சென்னை - 32’ எனும் முகவரியில் ஜன.31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நோ்காணலில் பங்கேற்கலாம்.

நோ்காணலுக்கு வருபவா்கள் சுயவிவரகுறிப்பு, கல்விச் சான்றிதழ், முன்அனுபவச் சான்றிதழ், அடையாள அட்டையுடன் வர வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 95668 14268 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை!

வேலூரில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆ... மேலும் பார்க்க

தமிழ்மீது பிரதமருக்கு அதீத அன்பு: மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.மதுரை மாவட்டம் மேலூர் பக... மேலும் பார்க்க

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரண... மேலும் பார்க்க

போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க