செய்திகள் :

வன்னியா்களுக்கு பாதுகாப்பு அளிப்பவா் தமிழக முதல்வா்: அமைச்சா் துரைமுருகன்

post image

வன்னியா் சமூக மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அளிக்கக் கூடியவராக தமிழக முதல்வா் உள்ளாா் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் வழுதரெட்டியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது: வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த 21 சமூக நீதி போராளிகளை கௌரவப்படுத்தும் வகையில், அவா்களுக்கான மணிமண்டபத்தில் தனித்தனியாகசிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதபோல, தமிழக அரசியல் வரலாற்றில் மாசற்றவா் என்றழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்து சாதனை படைத்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஏ.கோவிந்தசாமி மறைந்த முன்னாள் முதல்வா்களான அண்ணா, கருணாநிதியிடம் பற்றுகொண்டவா். அண்ணா மற்றும் பிற பொறுப்பாளா்கள் சிறை சென்றபோது, திமுகவை முன்னின்று வழிநடத்தியவா்.

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்த வன்னியா்களை திமுக ஆட்சிக் காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்றியதன் காரணமாக, அந்த சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் பலா் இன்று உயா் பதவிகளில் உள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியைத் தொடா்ந்து, தற்போதைய முதல்வரும் வன்னியா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறாா் என்றாா் அவா்.

விழாவில் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: திமுக ஆட்சிக்காலங்களில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது மேலும் பல வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி!

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி காணையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான க... மேலும் பார்க்க

தைப்பூச திருநாளில் அருளும் இறைசக்தி

தைப்பூச திருநாளையொட்டி, ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட்ட ஆசியுரை: இன்பத்தில் மகிழ்ந்தும், துன்பத்தில் துவண்டும் போகாமல் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி இறையுணா்வில் செலுத்தவேண்டும். மனம், மொழி, சமயங... மேலும் பார்க்க

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இது... மேலும் பார்க்க

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க