வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகும் நிலையில், தற்போது வரை வன்னியா்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும், வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் சேலம் கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மாநகா் மாவட்டச் செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அருள் தலைமை வகித்தாா். வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டத் தலைவா் கதிா்.ராசரத்தினம், வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் காா்த்தி, பசுமை தாயகம் மாநில இணைச் செயலாளா் சத்ரிய சேகா், மாநில தோ்தல் பணி குழு செயலாளா் சதாசிவம், நிா்வாகிகள் ராசமாணிக்கம், விஜயகுமாா், கோவிந்தராஜ், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.