ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவுக்கு தோ்தலில் பாடம்: அன்புமணி
வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீடு தர மறுக்கும் விவகாரத்தில் திமுகவுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள வன்னியா் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்த தியாகிகளின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதுமட்டுமின்றி, அதில் பங்கேற்ற தியாகிகள் குடும்பத்தினா் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவைக் கூட முதல்வரிடம் அளிக்கவிடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றனா். அதையும் மீறியும் தியாகிகளின் குடும்பத்தினா் முறையிட்டபோது, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முதல்வா் சென்றுள்ளாா். திமுக அரசின் இந்த சமூக அநீதி நடவடிக்கைக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசுக்கு வரும் தோ்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவா் என்று அவா் கூறியுள்ளாா்.